உலக சுற்றுசூழல் பிரச்சனை! இங்கிலாந்து இளவரசர் அறிவித்த அதிரடியான பரிசு!

இன்று வளர்ந்துள்ள நாகரீகம் மனிதனை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றாலும், சில விஷயங்களில் மனிதனை மந்தமாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், சுற்றுசூழல் மாசு என்பது குறைந்தபாடில்லை. இதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை சில நாட்களில் மக்கள் மறந்து விடுகின்றனர்.
இந்நிலையில், பெரும் சவாலாக உள்ள உலக சுற்றுசூழல் பிரச்சனையை எதிர்கொள்ள, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, சுற்றுசூழல் பிரச்சனையை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகளை அளிப்பவர்களுக்கு எர்த்ஷாட் பரிசு வழங்கப்படும் என்று புதிய பரிசை அறிமுகம் செய்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்திய மதிப்பில், ரூ.9 கோடியே 48 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த பரிசை வழங்குவதற்காக, இளவரசர் வில்லியம் சுமார் 474 கோடியை ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025