முதல் பெண் துணை அதிபர் கமலா ஹரிஸை கொண்டாடும் விதமாக லிங்கன் நினைவகத்தில் கண்ணாடி உருவப்படம்!
அமெரிக்காவில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு லிங்கன் நினைவகத்தில் கண்ணாடி உருவப்படம் கொண்ட ஒன்றை தேசிய மகளிர் வரலாற்று அருங்காட்சியகம் நிறுவியுள்ளது.
விறுவிறுப்பாக கடந்த வருடம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸுக்கு அமெரிக்காவிலும் சரி பிற நாடுகளிலிருந்தும் சரி நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் கமலா ஹரிஸின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளும் மக்கள் விரும்பும் வண்ணம் இருப்பதால் பலரும் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை பெண் அதிபர் கமலா அவர்களை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் உள்ள லிங்கன் எனும் நினைவகத்தில் தனித்துவமான கண்ணாடி உருவப்படம் ஒன்றை தேசிய மகளிர் வரலாற்று அருங்காட்சியகம் நிறுவியுள்ளது.