இந்தியாவின் தலைமையை பார்ப்பதில் மகிழ்ச்சி – பில்கேட்ஸ் புகழாரம்

அறிவியல் கண்டுபிடிப்பு, தடுப்பூசி உற்பத்தி திறனில் இந்தியாவின் தலைமையை பார்ப்பதில் மகிழ்ச்சி என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் தற்போது இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு அவசர காலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு தற்போது அனுமதி கொடுத்து உள்ளது.
இதனிடையே. டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய இயற்பியல் ஆய்வகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில், அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம், கொரோனா தடுப்பூசி திட்டம், அறிவுசார் காப்புரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் பேசியிருந்தார்.
இந்நிலையில், இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகில் தலைசிறந்த செல்வந்தரில் ஒருவரான பில் கேட்ஸ், கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலகம் செயல்பட்டு வரும் நிலையில், அறிவியல் கண்டுபிடிப்பு, தடுப்பூசி உற்பத்தி திறனில் இந்தியாவின் தலைமையை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
It’s great to see India’s leadership in scientific innovation and vaccine manufacturing capability as the world works to end the COVID-19 pandemic @PMOIndia https://t.co/Ds4f3tmrm3
— Bill Gates (@BillGates) January 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025