அந்த வகையில், கல்சியம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதிலும் 3 வகை பழங்கள் உள்ளது.
உலர்ந்த அத்தி அல்லது அஞ்சீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட உலர்ந்த பழமாகும். அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் இனபெருக்க ஆரோக்கியத்தை அதிகரிகிறது. இதில் ஜின்க், மாங்கனீஸ், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் இருப்பதால் இனபெருக்க ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகின்றது. குழந்தை பெறுவதில் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் இந்த பழத்தை தினமும் உண்ணலாம். 100 கிராம் உலர்ந்த அத்தி பழத்தில் 162 மிகி கால்சியம் நிறைந்துள்ளது
பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் 44 % கிடைக்கிறது, மேலும் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் கவலைகளில் ஒன்று பிரசவத்தின் போது உண்டாகும் வலி மற்றும் பிரசவத்திற்கு பின் உண்டாகும் உடல் பருமன். இரண்டிற்குமே பதில் தருகிறது பேரிட்சை பழம். அதாவது கர்ப்ப காலத்தில் தினமும் 4 பேரிட்சை சாப்பிட்டு வந்தால் வலியில்லாத பிரசவத்தை தருகிறது. அதோடு பிரசவத்திற்குப் பின் வரும் உடல் பருமனை குறைக்க உதவிக்கிறது. 100 கிராம் பேரிச்சம்பழத்தில் 39 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது.
தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு அருமையான பானமாக இருக்கிறது. ஆனால், கைக்குழந்தைகளாக இருந்தால் ஆரஞ்சுப் பழச்சாறு மற்றும் பாதி அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் வெறும் சாறாக கொடுக்கலாம் இல்லையென்றால் பழத்தை உரித்துக் கொடுக்கலாம். 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 40 மி.கி கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…