காதலியின் கரம்பிடித்த தெலுங்கு நடிகர்.! அழகான திருமண புகைப்படங்கள் உள்ளே.!
தெலுங்கு நடிகரான நித்தீன் மற்றும் அவரது காதலியான ஷாலினியின் திருமணம் நேற்று ஆடம்பரமாக நடைப்பெற்றுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகரான நித்தீன் தனது காதலியுடனான ஷாலினியுடனான திருமணத்தை துபாயில் வைத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதில் பங்கேற்க பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.ஆனால் லாக்டவுன் மற்றும் கொரோனா தொற்று காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இவர்களது திருமணம் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரும் ஜூலை 26ம் தேதி இரவு 8.30மணிக்கு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது
மேலும் சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தத்தை எளிமையாக ஒருவருக்கொருவர் மோதிரத்தை மாற்றி செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் நித்தீன் மற்றும் ஷாலினியை ன் திருமணம் உறவினர்கள் முன்னிலையில் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபலாக்நுமா பேலஸ் ஹோட்டலில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றுள்ளது. தற்போது திரையுலக பிரபலங்கள் பலர் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நித்தீன் தற்போது கீர்த்தி சுரேஷூடன் இணைந்து RangDe படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.