கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்க்குகளையும் நன்றாக பயன்படுத்தி போட்டியில் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு முகனுக்கு கிடைத்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்தபோது ஷெரினுடன் நல்ல நட்பு தொடர்ந்தது அது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இவர்களது நட்பை போட்டியாளர்கள் சிலர் காதல் என்று பேசினர். ஆனால் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மாடலிங் துறையில் அவருக்கு உதவியாக இருந்த ஷனம் ஷெட்டிதான் தர்ஷனின் காதலி என்று தகவல்கள் வெளியாகின. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட ஷனம் ஷெட்டி, என்னால் தர்ஷனின் வெற்றி பறிபோவதாக பேசுகின்றனர். அதனால் இனி நான் தர்ஷனைப் பற்றி பேசப்போவதில்லை. என் வாழ்வில் அவர் இல்லை என்று கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் 2019-ல் தர்ஷன் மற்றும் ஷனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…