தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பிக்பாஸ் பிரபலத்தின் மீது காதலி புகார்.!

Default Image
  • கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இப்போட்டியில் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.
  • தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி. 

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்க்குகளையும் நன்றாக பயன்படுத்தி போட்டியில் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு முகனுக்கு கிடைத்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்தபோது ஷெரினுடன் நல்ல நட்பு தொடர்ந்தது அது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இவர்களது நட்பை போட்டியாளர்கள் சிலர் காதல் என்று பேசினர். ஆனால் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மாடலிங் துறையில் அவருக்கு உதவியாக இருந்த ஷனம் ஷெட்டிதான் தர்ஷனின் காதலி என்று தகவல்கள் வெளியாகின. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட ஷனம் ஷெட்டி, என்னால் தர்ஷனின் வெற்றி பறிபோவதாக பேசுகின்றனர். அதனால் இனி நான் தர்ஷனைப் பற்றி பேசப்போவதில்லை. என் வாழ்வில் அவர் இல்லை என்று கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் 2019-ல் தர்ஷன் மற்றும் ஷனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் நடந்த நிலையில்,  தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்