இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மேயாத மான் பட புகழ் நடிகை இந்துஜா, விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்துஜாவை பற்றிய மீம்ஸ் மற்றும் டிக்டாக் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
பிகில் ட்ரைலரில் வரும் “கேக்கல..கேக்கல” சீன் டிக்டாக் உள்ளிட்ட தளங்களில் மிக அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதுகுறித்து இந்துஜா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், நான் ஷூட்டிங்கில் விக் வைத்து தான் நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களே என்னை கலாய்த்துகொண்டு தான் இருந்தார்கள். நான் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டேன்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் மீம்களை பார்த்து என்ஜாய் செய்கிறேன், எப்படி இருந்தாலும் அவர்கள் படத்தை promote தான் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…