எழுந்து வா சூர்யா அன்புடன் தேவா.! – மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி ட்வீட்!
ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என்று நடிகர் மம்மூட்டி ட்வீட்.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது. ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும். ரஜினிகாந்த் முழு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை விரைவில் ஆரோக்கியம் பெற வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்களையும், வேண்டுதலையும் செய்து வருகின்றனர். அந்த வகையில், கேரள சூப்பர்ஸ்டார் மம்முட்டி, நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தளபதி படத்தை நினைவுபடுத்துற மாதிரி, விரைவில் குணமடையுங்கள் சூர்யா என்று சொல்லி அன்புடன் தேவா என்று பதிவிட்டுள்ளார்.
Get well soon Soorya
Anpudan Deva pic.twitter.com/r54tXG7dR9— Mammootty (@mammukka) December 26, 2020