உங்கள் அன்பானவர்கள் நலனுக்காக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று நடிகை சிம்ரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொண்டு வருகிறார்கள். சிலர் பயந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தாமல் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் நேற்று மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். அதனை தொடர்ந்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளார். இதில் ” குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாக இருக்க ஒரு சிறந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் எனக்கான முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். உங்களைச் சுற்றியுள்ள உங்களின் அன்பானவர்களின் நன்மைக்காக நீங்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என்று வலிறுத்தியுள்ளார்.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…