உடலில் உள்ள தழும்பை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ !!!!
உடலில் காயம் ஏற்படுவது இயற்கை ஆனால் இந்த காயம் தழும்பாக மாறி என்றுமே மறையாத வடுவாக மாறுகிறது. இதனால் நாம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். முகத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதன் தழும்பை எப்படி சரி செய்வது என்று சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .மேலும் அது முகத்தில் இருக்கும் அழகை கெடுத்து விடும். இதை இயற்கையாக எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள் :
கஸ்தூரி மஞ்சள் -5கி
வேப்பிலை -5கி
கசகசா -5கி
செய்முறை :
கசகசா ,கஸ்துரி மஞ்சள் ,வேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும் இதனை தினமும் தழும்பு இறக்கும் இடங்களில் போட்டு வந்தால் மிக விரைவில் தழும்புகள் மறைந்து சீக்கிரமாகவே பழைய நிறம் மாறும்.
பயன்கள்:
கசகசா இது உடலில் உள்ள நரம்பு தளர்ச்சி நோயை குணமாக்கும் தன்மை உடையது .மேலும் இது சருமத்தியில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் தன்மை வாய்ந்தது .அடுத்ததாக வேப்பிலை இது சருமத்திற்கு பொலிவினை ஏற்படுத்தும் ,பொடுகுத்தொல்லையை குணப்படுத்தும்.கஸ்தூரி மஞ்சள் இது கிருமி நாசினியாக பயன்படுகிறது.மேலும் இது புற்றுநோய் வராமல் தடுக்கும். சளி,நெஞ்சு சளி ,ஆராதபுண்களை குணப்படுத்தும் .இது காயங்களால் ஏற்படும் தழும்புகளை ஆற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்டு தழும்புகளை விரைவில் ஆற்றுகிறது.