உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நடிகர்கள் அரசியல்வாதிகள் பெரியவர்கள் என அனைவருமே இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களால் இயன்றவரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடிய மிகக்கொடுமையான இந்த கொரோனா வைரஸ் நமக்கும் தொடராமல் இருப்பதற்கு தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்.
நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, விளையாடுவது என தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள். மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கலில் கிடைக்கக் கூடிய மாஸ்க்கை வாங்காதீர்கள். அது மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உதவட்டும்.
நாம் நமக்கான மாஸ்க்கை வீட்டிலேயே தயாரிக்கலாம். நானே எனது வீட்டில் உள்ளவர்களுக்கு மாஸ் தயாரித்துக் கொடுத்து வருகிறேன். சுத்தமான துணியை மூன்று அடுக்குகளாக வைத்து மாஸ்க்குகளை தயாரிக்க முடியும் என நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை கூறியுள்ளார். இதே ஆலோசனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …