ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரௌபதி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “ருத்ரதாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் 5.4மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.
இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியிடும் தேதி நாளை அறிவிக்கப்படும் திரையரங்கில் கொண்டாட தயாராகுங்கள் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் மேலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ராதாரவி, பாலா, சேசு போன்றோர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…