இந்தியாவை தொடர்ந்து UK விலும் உருமாரிய கொரோனா வைரஸ் – ஜெர்மனி முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இந்தியாவில் தான் உருமாரிய கொரோனா வைரஸ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த உருமாரிய வைரஸ் அசல் வடிவத்தை விட அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்று WHO தெறிவித்திருந்தது. மேலும் இது கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்து செயல்படக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இங்கிலாந்திலும் புதிதாக உருமாரிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனால் ஜெர்மனியின் பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் நிறுவனம் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தை வைரஸ் உருமாற்றம் கொண்ட பிராந்தியமாக வெள்ளிக்கிழமை அறிவித்தது, மேலும் இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடத்தக்க பயண கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மே 23 முதல் யுனைடெட் கிங்டமில் இருந்து ஜெர்மனியில் நுழையும் எவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தல் அவசியம் என ஜெர்மணி அரசு கூறியுள்ளது. மேலும் ஜெர்மன் குடிமக்கள் அல்லது அங்கு வசிக்கும் மக்களை மட்டுமே நாட்டிற்குள் அழைத்துவர விமான நிறுவனங்கள், ரயில் மற்றும் பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…