கொரோனா வைரஸ்: இங்கிலாந்து உருமாரிய வைரஸ் உள்ள பகுதி.. ஜெர்மனி அதிரடி அறிவிப்பு

Default Image

இந்தியாவை தொடர்ந்து UK விலும் உருமாரிய  கொரோனா வைரஸ் – ஜெர்மனி முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

இந்தியாவில் தான் உருமாரிய கொரோனா வைரஸ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த உருமாரிய வைரஸ் அசல் வடிவத்தை விட அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்று WHO தெறிவித்திருந்தது. மேலும் இது கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்து செயல்படக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இங்கிலாந்திலும் புதிதாக உருமாரிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனால் ஜெர்மனியின் பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் நிறுவனம் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தை வைரஸ் உருமாற்றம் கொண்ட பிராந்தியமாக வெள்ளிக்கிழமை அறிவித்தது, மேலும் இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடத்தக்க பயண கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மே 23 முதல் யுனைடெட் கிங்டமில் இருந்து ஜெர்மனியில் நுழையும் எவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தல் அவசியம் என ஜெர்மணி அரசு கூறியுள்ளது. மேலும் ஜெர்மன் குடிமக்கள் அல்லது அங்கு வசிக்கும் மக்களை மட்டுமே நாட்டிற்குள் அழைத்துவர  விமான நிறுவனங்கள், ரயில் மற்றும் பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்