இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சபதம்: பிரதமருக்கு ஜெர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல் கடிதம்.!

Default Image

ஜெர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை இன்று அவர் கொண்டாடி வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், 70-வது பிறந்தநாளை முன்னிட்டு எனது அன்பான வாழ்த்துக்களை ஏற்கவும், எங்கள் நம்பகமான மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மேர்க்கெல் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பாரம்பரியமாக நல்ல உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த நவம்பரில் இந்தோ-ஜெர்மன் உள்நாட்டு அரசு ஆலோசனைகளில் நாங்கள் சந்தித்ததைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த நினைவுகள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக மேர்க்கெல் உறுதியளித்துள்ளார். நீங்கள் தொடர்ந்து வெற்றிபெற விரும்புகிறேன். அசாதாரண காலங்களில், உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு ஆகியவற்றை பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். இதனை மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்