அமெரிக்க தேர்தலில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் அதிபர் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பது பெரிதாகவோ பார்க்கப்படுகிறது. இரண்டு சபைகளில் ஏதாவது ஒன்றில் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் இருந்தால் அதிபர் தான் நினைத்ததை செயல்படுத்தவது கடினம்.
ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி இந்த இரண்டு சபையிலும் அதிகத்தை செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி இரண்டும் போதிய வாக்குகளை பெறாததால் நேற்று மீண்டும் மறு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி கட்சியை சார்ந்த வார்னாக் மற்றும் ஜான் ஓசோஃப் 2 பேர் வெற்றி பெற்றதால், செனட்டில் ஜனநாயக கட்சியின் பலம் 48 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அதிகம் செலுத்தி வந்த குடியரசு கட்சியின் பலம் 52-லிருந்து 50 ஆக குறைந்தது. இதனால், செனட் சபையில் குடியரசு கட்சி பின்னடைவை சந்த்தித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு செனட் சபை ஜனநாயக கட்சியின் கைக்கு வந்துள்ளது.
மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் தான் செனட் சபை நடக்கும் என்பதால், தற்போது தேர்வாகியுள்ள அதிபர் ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் எளிதாகவே வெற்றிபெறும்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…