ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை என அம்மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடைபெற்று மிக விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு அதில் ஜோ பைடன் அவர்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர் தான் வெற்றியாளர் எனவும் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தனது தோல்வியை டிரம்ப் தற்பொழுதுவரை ஒப்புக் கொள்வது போல் இல்லை. ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறுகூட்டல் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு மாகாணத்தில் நடக்கக்கூடிய மறுகூட்டலால் பைடனுக்கு தோல்வி இல்லை என்று அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் வெளியுறவுத் தறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் அவர்கள் இது குறித்து கூறுகையில், இன்னும் சில மாவட்டங்களில் உள்ள வாக்குகள் மட்டும் எண்ணிக்கை முடிந்து வர காத்திருக்கிறது. ஆனால் பெரிய மாவட்டங்களில் எல்லாம் நாங்கள் எண்ணி முடித்து விட்டோம். மொத்தமாக ஜார்ஜியா மாநிலம் முழுவதிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்தாலும் அது பைடனின் வெற்றியை மாற்றும் என நான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…