அமெரிக்காவின் கருப்பினத்தவர் ஆகிய ஜார்ஜ் பிளாய்ட் அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் ஷாவின் தான் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாப்போலீஸ் எனும் நகரை சேர்ந்தவர் தான் கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாய்ட். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் மினியாப்போலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய ஜார்ஜ் 20 டாலர் கள்ளநோட்டு கொடுத்ததாக கடையின் ஊழியர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த இருபது டாலர் இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 500 ரூபாய். இதனையடுத்து கடை ஊழியரின் புகாரை ஏற்று அவ்விடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரி டெரிக் ஷாவின் தலைமையிலான 4 போலீசார் புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு ஜார்ஜ் பிளாய்ட்டை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் ஜார்ஜ் மறுத்ததை அடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் ஜார்ஜை தரையில் தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து அழுத்தியுள்ளார். இதனால், மூச்சு விட முடியவில்லை என ஜார்ஜ் கதறிய போதும் போலீஸ் அதிகாரிகளின் விடாததால் அவ்விடத்திலேயே ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் போராட்டமாக வெடித்தது. இதற்கு நீதி வேண்டும் எனவும் டெரிக்கின் செயலை கண்டித்தும், மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராகவும் ஜார்ஜின் குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை அடுத்து டெரிக் உள்ளிட்ட நான்கு போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு மினசோட்டாவிலுள்ள ஹென்னபின் நகரிலுள்ள மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை முடிவில் தற்பொழுது டெரிக் ஷாவின் தான் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளதுடன் இவரது குற்றத்திற்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜார்ஜ் கொல்லப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் 40 ஆண்டுகள் வரையிலும் போலீஸ் டெரிக்குக்கு தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…