ஜெனிவா கூட்டத்தில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதம்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சிறுபான்மை சிந்தி இனத்தவரை பாகிஸ்தான் அரசு கொடூரமான முறையில் நசுக்குவதாகவும், நூற்றுக்கணக்கான சிந்தி மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து, மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய உலக சிந்தி காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹிதாயத் பூட்டோ, சிந்தி இன மக்களின் நிலங்களைப் பறித்து அவர்களை வெளியேற்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக குற்றம் சாட்டினார். கைதான அனைத்து சிந்தி போராளிகளை விடுவிக்க பாகிஸ்தான் அரசை வலியுறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.