நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு!

Default Image

பிரிட்டன் நீதிமன்றம், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் உளவு நிறுவனங்களின் கணிணியை ஹேக் செய்தாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டீஸ் இளைஞரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த  மறுத்து விட்டது.

லவுரி லோவ் (Lauri Love) என்ற 32 வயது இளைஞர் கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ (FBI), நாசா மற்றும் அமெரிக்க ராணுவ கம்ப்யூட்டர்களை ஹேக் செய்ததாக கைது செய்யப்பட்டார். பிரிட்டனில் வசித்து வரும் இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், அதை எதிர்த்து லவுரி மேல்முறையீடு செய்தார்.

Image result for Lauri Love AMERICA SECRETS LEAK

இந்நிலையில் மேல் முறையீட்டு விசாரணையில் ஆஜரான லவுரியின் வழக்கறிஞர், லவுரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் எனவும் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், லவுரியை தேவையில்லாமல் நாடு கடத்த முடியாது எனக் கூறினர். தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடக்கும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரிட்டனிலேயே அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்