கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் லிப்ட். இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் இப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
இந்நிலையில், படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லிப்ட் படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என நடிகர் கவின் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது .” இந்த லிஃப்ட் திரைபடத்திற்காக கனவுகளுடன் பலர் பணியாற்றியுள்ளனர். ஈனக்கு நம்பிக்கையும், வலிமையும் அளித்த அனைவருக்கும் நன்றி. மேலும் உங்கள் ஆதரவு எனக்கு தேவை.
இறுதியாக, லிஃப்ட் உங்கள் இடத்திற்கே வந்துவிட்டது. பார்த்து மகிழ்ந்திருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…