விடுதலை திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி , சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பத்து தல, ருத்ர தாண்டவம் போன்ற பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…