விடுதலை திரைப்படத்தில் இணைந்த கௌதம் வாசுதேவ் மேனன்..??

Default Image

விடுதலை திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி , சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.  இந்த படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பத்து தல, ருத்ர தாண்டவம் போன்ற பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்