கௌதம் மேனன் அடுத்ததாக அமேசான் பிரேம் தளத்திற்கு வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.அதனையடுத்து திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை வரவேற்பைப் பெற்றார். இவர் படங்களை இயக்குவதோடு வெப் சீரிஸ்களையும் தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் கூட ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் Queen என்ற வெப் சீரிஸை தயாரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த ஒரு வெப் சீரிஸை அமேசான் பிரேமிற்காக தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மதக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை சசிகுமாரின் கிடாரி படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன் இயக்குகிறார். ஏற்கனவே இவர் கௌதம் மேனன் தயாரித்த queen வெப் சீரிஸில் இணைந்து இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த வெப் சீரிஸில் கௌதம் மேனன் கதாநாயகனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸ் மற்றும் கேங்க்ஸ்டர் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…