கௌதம் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தின் வசூல் என்ன தெரியுமா.!

சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் 2010ல் வெளியாகி பல இளசுகளின் மனதை கவர்ந்த படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்கள் மட்டுமில்லாமல் வசனங்களும் காதல் செய்பவர்களின் பேவரட் என்று கூறலாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் ஹிட் அடித்தது. எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கௌதம் மேனன் முடிவு செய்ததோடு கதையும் எழுதி முடித்துள்ளதாக கூறப்பட்டது .
நேற்றைய தினம் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்தின் முன்னோட்டமாக திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் கௌதம் மேனன். இதில் 10வருடங்களுக்கு பின்னர் கார்த்திக் ஜெஸ்ஸியை தொலைபேசியில் அழைத்து பேசுகையில், கார்த்திக் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல, ஜெஸ்ஸியோ நீ எனது மூன்றாவது குழந்தை என்று கூறுவது போன்ற கதையாகும். இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் விமர்சனங்களையும் பெற்றது. இந்த குறும்படமத்தினை 7மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். எனவே இதிலிருந்து கௌதம் மேனன் அவர்களுக்கு சுமார் 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் வாசுதேவ் மேனன் ஏற்கனவே இதிலிருந்து வரும் பணத்தை அனைவருக்கும் சரிசமமாக பிரித்து கொடுப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025