கோவிட்-19 குறித்த ஆவணப்படத்தை உருவாக்கும் கௌதம் மேனன்.!

கோவிட் 19க்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆவணப்படம் ஒன்றை கௌதம் மேனன் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.ஊரடங்கில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தையும் , மேகா ஆகாஷ், சாந்தனு, கலையரசன் ஆகியோர் நடிப்பில் ஒரு சான்ஸ் கொடு என்ற மியூசிக் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனையடுத்து இவரது இயக்கத்தில் விக்ரம் அவர்களின் துருவ நட்சத்திரம் மற்றும் வருண் அவர்களின் யோசுவா இமை போல் காக்க ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.
இந்த நிலையில் தற்போது இவர் டிஸ்கவரி பிளஸுடன் இணைந்து ஒரு டோக்குமென்ட்ரி செய்யவுள்ளனர். ‘கோவிட்19:வைரஸூக்கு எதிரான இந்தியாவின் போர்’ என்ற அந்த ஆவணப்படம, கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னில் நின்று அயராது உழைக்கும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் அனுபவங்களையும் கொண்டிருக்கும்.
இந்த தொகுப்பின் தமிழ் பதிப்பை கௌதம் மேனன் அவர்களும், இந்தி மொழியில் நடிகரான மனோஜ் பாஜ்பாய் அவர்களும் விவரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஜூலை 16 அன்று இரவு 8 மணிக்கு டிஸ்கவரி பிளஸ்லும் ஜூலை 20 அன்று டிஸ்கவரி சேனலிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025