பிக்பாஸ் பிரபலங்களுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.!
பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், சேரன்,சிநேகன் ஆகியோருடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக்.தற்போது பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் இவர் புது படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் .நடிகரும் இயக்குனருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான சரவணன் ,சேரன் ,சிநேகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சிந்துகுமார் இசையமைக்க ,பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார்.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருவாரியான மக்களின் பாராட்டுடன்,வசூலும் வாரி வாரி வழங்க … ஶ்ரீவாரி பிலிம்ஸின்
‘ஆனந்தம் விளையாடும் வீடு’ முதல் பார்வையை வெளியிட்டு முதல் ஆளாய் மகிழ்கிறேன்!. @srivaarifilm @NandaPeriyasamy @Gautham_Karthik @directorcheran @Music_Siddhu @ShivathmikaR @balabharani @SnehanMNM pic.twitter.com/LYtAkqNbif— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 1, 2021