விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம் படத்தில் முதன் முதலாக நடிகர் ரஜினி தான் நடிக்கவிருந்தார் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளதாக தகவல்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த 2017 ஆண்டே தொடங்க பட்ட இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இதனால் மீதமுள்ள பட காட்சிகளை இந்தாண்டு முடித்து விரைவில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சில முக்கியமான விஷியங்களை கூறினார். அதில் முக்கியமாக துருவநட்சத்திரம் படத்தில் முதன் முதலாக நடிகர் ரஜினி தான் நடிக்கவிருந்தார் என்றும், ஆனால் எதிர்பாராமல் நடைபெறவில்லை அவரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் எமோஷ்னல் படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…