விஜய்க்கு இந்த மாதிரி படம் செய்யதான் ஆசை – கெளதம் மேனன்..!

விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படம் செய்ய வேண்டும் இது எனக்கு நீண்டநாளாக ஆசை என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாவை போலதான் இருக்கும். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜயை வைத்து இப்போது படத்தை இயக்க பல இயக்குனர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படம் செய்ய வேண்டும் இது எனக்கு நீண்டநாளாக ஆசை என்றும், முழு திரைக்கதையுடன் அவரை சென்று பார்த்தால் கண்டிப்பாக நடக்கும் என்று நலம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். இயக்குனர் கெளதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு யோகன் என்ற படத்தை இயக்கிவந்தார் ஆனால் சில காரணங்களால் படம் பாதியிலே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025