கௌதம் கார்த்திக் & சிம்பு கூட்டணி…. மிரட்டலாக வெளியான “பத்து தல ” போஸ்டர்..!
இயக்குனர் என். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகர் சிம்பு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு “பத்து தல” என்று வைக்கப்பட்டுள்ள போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது கன்னட ரீமேக் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் அந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் என் கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும் படத்திற்கான தமிழ் தலைப்பை அவரே அறிவித்துள்ளார். “பத்து தல ” என பெயர் வைத்திருக்கும் அந்த டைட்டில் போஸ்டரை 10 இயக்குனர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் நடிகர் கௌதம் கார்த்தியும் இணைந்து நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பத்து தல என பெயரிடப்பட்டிருப்பதால் நடிகர் சிம்பு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை பற்றி மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
#Pathuthala
Happy to share screen space with younger brother @goutham_karthik , Excited to work with my friend @nameis_krishna &
a reunion with @kvgvraja #SilambarasanTR45 #Atman @StudioGreen2 @kegvraja @SilambarasanTR_ @Gautham_Karthik @NehaGnanavel@nameis_krishna pic.twitter.com/KEcvZ4qdUr— Silambarasan TR (@SilambarasanTR_) December 24, 2020