சிம்புவின் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக்.! என்ன படம் தெரியுமா.?
சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும், அவருடன் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன .
அந்த வகையில் சிம்பு அடுத்ததாக மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது .அதில் சிவராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜஜா இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்படுகிறது.மஃப்டி படத்தின் ரீமேக்கை சில்லுனு ஒரு காதல் படத்தினை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .எனவே சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து மஃப்டி ரீமேக்கில் நடிப்பார் ,அதன் பின்னரே வெங்கட் பிரபுவின் மென்டல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.