சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு!
சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு.
நமது வீடுகளில் அனைவருமே சமையலில் பூண்டை பயன்படுத்துவதுண்டு. இந்த பூண்டை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகளை நீக்க கூடிய தன்மை கொண்டது.
தற்போது இந்த பூண்டில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
சரும பிரச்சனை
இன்று நமது சருமத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு, இயற்கையான முறையில் தீர்வு காண்பதைவிட, செயற்கையான முறையில் தீர்வு காணத் தான் முயல்கிறோம். ஆனால், செயற்கையான முறையில் நாம் எடுக்கின்ற முயற்சிகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம், பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
ரத்த குழாய் அடைப்பு
பூண்டை நாம் அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், ரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
புற்றுநோய்
பூண்டை நாம் அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அல்லில் சல்பைடு என்ற பொருள், புற்றுநோய் எதிர்ப்பியாக செயல்பட்டு நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது