தஞ்சை பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடையே பெரிய ஒற்றுமை தொடர்பு ஒன்று உண்டு. அதாவது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜனின் மகன் ராஜ ராஜேந்திரன் தான் கங்கைகொண்ட சோழபுரத்ததில் உள்ளபிரகதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார். தன் தந்தை கட்டிய கோவிலை விட இந்த கோவிலில் உள்ள லிங்கம் மிகப்பெரியதாக இருக்கவேண்டும் என எண்ணி இந்த லிங்கத்தை ஒரே கல்லில் உருவாக்கினார். அந்த கோவிலில் உள்ள கலசத்தின் நிழல் கீழே விழாது.
மாமன்னர் ராஜ ராஜேந்திரன் தான் போர்களில் வென்று தன்னிடம் தோற்ற மன்னர்கள் கையினால் நீரை எடுத்துவந்து இங்குள்ள மிக பெரிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வைத்தார். அதனால் தான் இந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் அபிஷேகம் செய்யும் நீர் கோவில் உள்ளேயே ஒரு கிணறு மூலம் சேமித்து வைக்கப்படுகிறது. கோயிலுக்குள் ராஜ ராஜேந்திரன் வரும்போதெல்லாம் இந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டுதான் தரிசனத்திற்காக உள்ளே செல்வாராம்.
13.5 அடி உயரமுள்ள இந்த சிவலிங்கம் ஆனது 60 அடி சுற்றளவு கொண்டது. சுற்றி படிக்கட்டுகள் உண்டு. அந்த படிக்கட்டுகள் மூலமாக ஏறி சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவலிங்கத்திற்கு எதிரே உள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு உள்ளது. இங்கு உள்ள பெரியநாயகி அம்மன் 9.5 அடி உயரம் கொண்டது. பகல் நேரங்களில் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு அந்த ஒளியானது சிவனின் மீது எதிரொலிக்கும் அந்த சமயம் விளக்குகளை அணைத்துவிட்டு சூரிய ஒளியில் பக்தர்கள் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அப்படி தரிசனம் செய்தால் மிகவும் நல்லது என அங்கு உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
கீழே சந்திரகாந்தா எனும் கல் உள்ளது. அந்தக் கல்லானது குளிர்காலத்தில் அதை ஈடுகட்டும் படி வெப்பத்தையும், கோடை காலத்தில் அதனை தணிக்க குளிரையும் கொடுக்கிறது.
இந்த கோவில் சென்று வழிபட்டால் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்குள்ள அம்மனை பிரார்த்தனை செய்யலாம். உடனே நல்லது நடக்கும். 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டி 14 அடி உயர மாலையும் அம்மனுக்கு ஒன்பது கஜ புடவையும் சாத்துவது சிறப்பு. இங்கு சிவனுக்கு சாத்தப்படும் புடவைகள் தனியே நெய்து கொடுக்கப்படுகின்றன.
இந்த பிரகதீஸ்வரர் கோவில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ளது.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…