நீண்ட இடைவெளிக்குப் பிறகு கங்கை அமரன் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் AV33 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அருண் விஜய் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.
படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், நடிகருமான கங்கை அமரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2016ல் வெளிவந்த சென்னை 600028 – 2 படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…