மூத்தவன் முன்னவனுக்கு பிடித்த முத்தான 21 …!பற்றி அறிவீர்களா..?
கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம்.நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவரும் இன்றே விழாவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க துவங்கி விட்டனர்.
விடிந்தால் சதுர்த்தி கொண்டாட்டம் அவ்வாறு கொண்டாடும் விழாவின் நாயகனுக்கு பிடித்த 21 வகையான மலர்கள் ,பழங்கள் , நைவைத்தியங்கள், இலைகள் பற்றி அறிந்து அவற்றை அவருக்கு படைத்து ஆணைமுகத்தவனின் அருளை பெறுவோம்.
விநாயகருக்கு பிடித்த மற்றும் படைக்கப்படும் 21 மலர்கள் :
புன்னை, மந்தாரை, மகிழம், , வில்வம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளிகுருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.இவற்றில் கிடைக்கும் மலர்களை அவருக்கு படைத்து அவன் அருளை பெறுவோம்.
விநாயகருக்கு பிடித்த மற்றும் படைக்கப்படும் 21 அபிஷேகப்பொருட்கள்:
தண்ணீர், எண்ணெய், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்,பழப்பஞ்சாமிர்தம், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப் பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அவரை குளிர்வித்தால் எண்ணியவற்றை அருள்வார் ஆனைமுகன்.
விநாயகருக்கு பிடித்த மற்றும் படைக்கப்படும் 21 இலைகள் :
மாசி, பருஹதி எனும் விஷ்ணு கிரந்தி, கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி,மாதுளை, தேவதாரு,மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு.
விநாயகருக்கு பிடித்த மற்றும் படைக்கப்படும் 21 நிவேதனப் பொருட்கள்:
மோதகம், சர்க்கரைப் பொங்கல்,பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம் அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு