கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம் என்று தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி கொடுப்பவர் ஆனைமுகன் நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
வீட்டில் பூஜையறையில் நாம் பூஜையை துவங்கும் முன்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவது வழக்கம் ஏன் பிள்ளையாரை பிடித்து வைக்கிறோம் அவற்றால் என்ன பயன் மேலும் இது போல் இன்னும் எவற்றில் எல்லாம் பிள்ளையார் பிடித்து வழிபடலாம் அவற்றால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிவித்து கொள்வோம்.
பிள்ளையாரை பிடித்து வைக்கும் பொருட்கள் :
மஞ்சள் , குங்குமம் , புற்று மண்,வெல்லம், உப்பு , வெள்ளெருக்கம், விபூதி,சந்தனம், வெண்ணெய்,சர்க்கரை,பசுஞ்சாணம் ,சாணம், வாழைப் பழம் ,கல் விநாயகர்,மண்
பிள்ளையாரை பிடித்து வைக்கும் பொருட்களால் ஏற்படும் பலன்கள் :
மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் மற்றும்
காரிய சித்தி அருள்வார்.
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் முற்றிலுமாக அகலும்.
குழந்தைகள் படிப்பில் மந்தநிலை மாறி படிப்பில் வல்லவராகுவார்.
புற்று மண்ணால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் தீரா நோய்கள் அகன்று உடல்நிலை சீராகும்.விவசாயம் செழிக்கும்.
வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள் கரையும்.
உப்பினால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் தொல்லை நீங்கி உங்களை விட்டு விலகுவர்.
வெள்ளெருக்கினால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் ஏவல் ,பில்லி, சூனியம் போன்றவைகள் விலகும்.செல்வம் நிலை உயரும்.
விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் முற்றிலுமாக விலகும்.
சந்தனத்தால் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
சாணத்தால் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் சகல தோஷமும் விலகி விடும் மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறம்.
வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் குடும்பத்தில் வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் கடன் தொல்லை அகலும்.
சர்க்கரையில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் படுத்தும் சர்க்கரை நோயின் வீரியமானது குறையும்.
பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் நோய்கள் விலகி ஐஸ்வர்யம் பெருகும் .
கல்லால் செய்த பிள்ளையார் வெற்றி ஈட்டித் தருவார்.
மண்ணால் செய்த பிள்ளையார் உயர் பதவிகள் கொடுத்து அருள்வார்.
இவ்வாறான பொருள்களில் பிள்ளையாரை பிடித்து நாம் பூஜையறையில் பூஜைக்கு முன் செய்து வழிபட்டால் பலன்களை அள்ளி தருவார் ஆனைமுகன்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…