நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ள காந்தி டாக்ஸ் எனும் புதிய படத்திற்கான அப்டேட் ஒன்றை தனது பிறந்த நாளான நேற்று விஜய் சேதுபதி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக மாஸ்டர் திரைப்படம் தற்பொழுதுதான் திரையிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடிய வில்லனாக விஜய் சேதுபதி இருப்பதாக இந்த படத்திற்கு பாராட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படங்கள் பற்றிய அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு கொண்டிருந்தன. இந்நிலையில் உப்பெணா எனும் தெலுங்கு படத்தில் அவர் வில்லனாக நடிக்கக் கூடிய படத்தின் போஸ்டர் நேற்று காலை வெளியாகியது. அதனை அடுத்து தான் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
காந்தி டாக்ஸ் எனும் பெயர் கொண்ட படம் இந்த படத்தை இயக்குனர் கிஷோர் பாண்டுரங் அவர்கள் இயக்குகிறார்.இந்தப் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி, சில நேரங்களில் மௌனம் தான் அதிக அளவில் ஒலிக்கும் எனவும், ஒரு புதிய சவால் மற்றும் எனக்கான ஆரம்பமாக இப்படத்தை கருதுகிறேன், எனது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன் எனவும் தெரிவித்துள்ள அவர், புதிய சவால்களுக்கு தான் தயாராக இருப்பதாகவும் உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…