கன்னம் சிவந்தது சீனாவிற்கு?? ஆக்கிரமிப்புகளை அகற்றி எரிந்த16 பிஹாரி படை!

Published by
kavitha

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் தனது அதிகாரத்தால் அத்துமீறி அமைத்திருந்த ஆக்கிரமிப்புகளையும், அறிவிப்புப் பலகைகளையும் ,இந்திய ராணுவத்தின் 16 பிஹாரி ரெஜிமென்ட் படை துடைத்து எரிந்து  அகற்றியது எவ்வாறு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சீன ராணுவத்தின் சார்பில் 350 வீரர்கள் இருந்தனர் அவ்வாறு இருந்தபோதிலும், 16 பிஹாரி ரெஜிமெண்ட் படையில் இருந்த  100 இந்திய வீரர்கள் அவர்களைச் சமாளித்த மட்டுமின்றி அடித்து நொறுக்கி அத்துமீறி வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை மட்டுமின்றி  ஆக்கிரமிப்புகளையும் அகற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பதற்றமான சூழல் நிலவி வரும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனோடு 50க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள்  வெளி வந்த நிலையிலும் இது குறித்து  சீனா வாய்த்திறக்கவில்லை மற்றும் எந்தவொரு  தகவலையும் அதிகாரபூர்வமாக இது வரை இதுகுறித்து வெளியிட மறுப்பது மட்டுமின்றி மவுனம் சாதித்து வருகிறது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக ஷ்யோக், கல்வான் நதிக்கரையில் உள்ள ஜாப் லடாக் பகுதியில் உள்ள ஓய்என்ற சந்திப்பில் சீன மற்றும் இந்திய ராணுவத்தி்ன் மூத்த அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய எல்லைக்குள்  சீனாவால் அத்துமீறி வைக்கப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகையை நீக்க வேண்டும் என 16 பிஹாரி ரெஜிமென்ட் உள்ளிட்ட இந்திய ராணுவம் சார்பில் சீன ராணுவத்திடம் கோரப்பட்டது.

எப்படியும் பேச்சுவார்த்தையில் சீனா தனது சுயமுகத்தையே காட்டும் என எண்ணியதோ தெரியவில்லை, பிஹார் ரெஜிமென்ட் உள்ளடங்கிய இந்திய ராணுவம் சார்பில் சிறிய குழுவானது அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அங்கேயே தங்கியிருக்கும் சீன ராணுவத்திடம் சென்று அறிவிப்புப் பலகையை நீக்கிவிட்டு அங்கிருந்து செல்ல அறிவுறுத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அக்குழுவானது சீன ராணுவத்திடம் சென்று, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆதலால், இந்தப் பலகையை அகற்றிவிட்டுச் சென்றுவிடுங்கள் என  ராணுவப் படையினர் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு சீன ராணுவம் மறுத்து விட்டது மேலும் அங்கிருந்து செல்ல முடியாது  என்று  இந்திய  ராணுவம் உள்ளிட்ட 16 பிஹாரி படையினரிடம் தெரிவித்து உள்ளனர்.

நிலையை உணர்ந்து  நடந்த சம்பவங்களைக் கூறிய பிஹாரி ரெஜிமென்ட் பிரிவினர்  அதிக படைகளை அனுப்பக்கோரிக் அதிகாரிகளைச் சந்திக்கத் திரும்பினர்.

இதன் பின்னர் ராணுவத்தின் 50 வீரர்களும், 16 பிஹாரி ரெஜிண்ட் பிரிவின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட வீரர்களும் உடன் சேர்ந்து சீன வீரர்கள் இருந்த இடத்துக்குச் சென்றனர்.

ஆனால், இந்திய வீரர்கள்  அவர்களை முன்னதாக சந்தித்து விட்டு திரும்பிச் செல்லும்போது  சீனா தரப்பில் 10 முதல் 15 சீன வீரர்களே இருந்த நிலையில் , இந்திய வீரர்கள் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் மீண்டும் வரும் போது அங்கு 300க்கும் மேற்பட்ட சீன வீரர்கள்  குவிக்கப்பட்டு இருந்தனர்.இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருப்பதால் அங்கிருந்து வெளியேறிவிடுமாறு பிஹாரி ரெஜிமென்ட் பிரிவினர் மீண்டும் சீன வீரர்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு இந்திய வீரர்கள் திரும்பி வருவார்கள் என்பதை கணித்த சீன ராணுவ வீரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த கற்களையும், ஆயுதங்களையும்  தயாராக வைத்திருந்தது. அப்போது அங்கு சென்ற ராணுவத்தின் 50 வீரர்களும்,16 பிஹாரி ரெஜிண்ட் பிரிவின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட வீரர்களும் என மொத்தம் 100 இந்திய்ய வீரர்கள் சீன ராணுவத்துடன் அமைதியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர், கலைந்து செல்லுமாறும் கூறியுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.ஆனால்  நேரம் செல்லச் செல்ல இருதரப்புப் படைகளுக்கும் வாக்குவாதம் அதிகரித்து நிலைமை கையை விட்டு மீறிவதற்குள் 16 பிஹாரி ரெஜிமெண்ட் படைகள், சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் அமைத்திருந்த குடில்கள், பலகைகள் அனைத்தையும் பிடிங்கி தூற வீசி எறியத் தொடங்கினர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற இந்திய ராணுவ வீரர்களைத் தாக்க ஏற்கெனவே தயாராக  ஆயுதங்களைத் வைத்திருந்த சீன ராணுவம், இந்திய ராணுவத்தின் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்  16 ரெஜிமெண்ட் கமாண்டிங் அதிகாரி, மற்றும் ஹவில்தார் பழனி, மீதுதான் முதல் தாக்குதலை சீன ராணுவம் அரங்கேற்றி உள்ளது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பிஹாரி  படையினர் சீன ராணுவத்தைப் புரட்டி எடுத்து உள்ளனர்.

அவ்வாறு சீன ராணுவத்தினர் பக்கம் 300 முதல் 350 வீரர்கள் இருந்தபோதிலும் இந்தியாவின் தரப்பில் இருந்த 100 வீரர்கள் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. சீன வீரர்களை பிஹாரி ரெஜிமென்ட் வீரர்கள்  பிரட்டி எடுத்த நிலையில் இந்திய படை வீரர்களின் மீது கற்களை மழையாகப் பொழிந்த சீன வீரர்களை பிஹாரி ரெஜிமென்ட் வீரர்கள் அடித்து நொறுக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சண்டையானது ஏறக்குறைய 3 மணிநேரம் வரை இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சண்டையில் சீன ராணுவ வீரர்கள் ஏராளமானோர் காயமடைந்தும், பலர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அசராமல் 350 வீரர்களை 100 இந்திய ராணுவ படை மற்றும் 16 பிஹாரி ரெஜிமெண்ட் படையினர் துவம்சம் செய்ததோடு மட்டுமின்றி அத்துமீறி அமைத்திருந்த குடில்கள், பதாகைகள், பலகைகள் அனைத்தையும் பிடுங்கி வீசி எறிந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு பின்னரே அப்பகுதியில் சீன தனது படைகளைக் குவித்து வலிமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எதிர்தரப்பில் எண்ணிக்கை அதிகமாகள் இருந்தபோதிலும், இந்திய ராணுவ வீரர்கள்,  16 பிஹாரி ரெஜிமெண்ட் படையும் சேர்ந்து ஒப்பந்தத்தை மீறி வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.எல்லையில் தாய்நாட்டை காத்து நிற்கின்றது காவல்தெய்வங்களாய் நெகிழவைக்கின்றனர் என்று வீரவணக்கத்துடன் நாடும் ,மக்களும் பெருமிதம் கொள்கின்றனர் .

 

Published by
kavitha

Recent Posts

“நன்றி என்றால் என்னவென்றே தெரியாத தலைவர்”.. எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!!

“நன்றி என்றால் என்னவென்றே தெரியாத தலைவர்”.. எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!!

சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…

20 mins ago

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

13 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

13 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

14 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

15 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

16 hours ago