லடாக், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்குள் நடந்த சண்டையை மையமாக கொண்டு பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்.
இந்திய – சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி, இரு நாட்டு ராணுவவீரர்களுக்கும் சண்டை எழுந்தது. இந்த சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும், இதில், படுகாயமுற்று இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் முக்கிய ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைகளில் தற்போது வரையில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தை மையமாக கொண்டு பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரே தனது அஜய் தேவ்கன் பிலிம்ஸ் சார்பாக செலக்டெட் மீடியா ஒர்க்ஸ் எனும் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம். தற்போது இந்த படத்திற்கான கதை, திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை யார் இயக்க உள்ளர்? யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…