முழுசுதந்திரம் அளிக்கப்பட்டது இந்திய ராணுவத்தினர்க்கு எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய எல்லைப்பகுதிக்குள் இருக்கும் லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு திடீரென்று சொந்தம் கொண்டாடி வரும் சீனா அடுத்தடுத்து அத்துமீறுதல் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியில் முன்வகித்து வருகிறது.இதன் காரணமாக இந்திய-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மேலும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவி அப்போதே பதற்றத்தை பற்றவைத்தது.
இதனால் பனிப்போர் ஏற்பட்டு வந்த நிலையில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மே 5 மற்றும் 6-ந்தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை குறைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் படை விலக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.இந்த பணியின் போது கடந்த 15ந்தேதி இரவு மீண்டும் இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டனர்.
இதில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்து நாட்டு மக்களிடையே கடும் கோபத்தையும் , வெறுப்பையும் பெற்றுள்ளதையும் சீனா பொருட்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் வெப்பத்தை விட எல்லையில் வெப்பம் கனலாக தகித்து வருகிறது.எல்லைத்தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே,கடற்படைத் தளபதி கரம்வீர் சிங்,விமான படைத் தளபதி ஆர்.கே.எஸ் பதௌரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எல்லைப்பகுதிகளான அருணச்சல பிரதேசம், சிக்கிம்,உத்தரகண்ட்,ஹிம்மாச்சல பிரதேசம் உள்ளிட்ட சீன எல்லைப்பகுதிகள் குறித்தும் நிலபரப்பு,வான்பரப்பு,கடற்பரப்புகளில் சீனாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு உயர்அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.மேலும் பதற்றமாக இருக்கும் எல்லையில் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க ராணுவ தளபதிகளுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…