வரலாற்றில் இன்று(15.02.2020)… நோக்கு வானியலின் தந்தை பிறந்த தினம் இன்று…
இத்தாலிய நாட்டின், இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் என பண்முகத்தன்மை கொண்டவர் கலீலியோ கலிலி ஆவார். இவர், இத்தாலி நாட்டின் பைசா நகரில் பிப்ரவர் மாதம் 15ஆம் நாள் 1564 அன்று பிறந்தார்.இவர் பைசா மற்றும் படுவா ஆகிய பல்கலைகழகங்களில் கல்வியை கற்றார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிகவும் முக்கியமான பங்காற்றியுள்ளார். கலீலியோ கலிலி “நோக்கு வானியலின் தந்தை” என்றும் “நவீன இயற்பியலின் தந்தை”, என்றும், “நவீன அறிவியலின் தந்தை” என்றும் பல்வேறு பெயருடன் பெருமையாக அழைக்கப்படுகிறார். இவர், தொலைநோக்கியின் மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தார்,
மேலும், வியாழன் கோளின் நான்கு பெரிய நிலாக்களைக் கண்டுபிடித்தது இவரது புகழை மேலும் உர்த்தியது. இவரது இந்த புகழை நினைவு கூறும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். கலீலியோவின் மிக முக்கிய கோட்பாட்டில் சூரியமையக் கொள்கையை கூறலாம். இந்த கோட்பாடு அவரது வாழ்நாளின் கடைசி வரை பிறரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிறைய வானியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தனர். கலீலியோ பின்னர் தனது இருவகை முதன்மை உலகக் கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் ” என்ற புத்தகத்தில் அவருடைய உறுதியான கோட்பாடான சூரியமையக் கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார். ஆனால் அது கத்தோலிக்க திருத்தந்தை எட்டாம் அர்பனைத் தாக்குவது போல் தோன்றியதால், அவர் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். கலீலியோ தன் இறுதிக் காலம் முழுவதையுமே வீட்டுச்சிறையிலேயே கழித்தார். கலீலியோ கலிலி இப்படி வீட்டுச்சிறையில் இருந்தபோது தான் தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றுமான தனது வாழ்நாளின் இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். இயற்பியல் துறைக்கு பல்வேறு அடிப்படை கருத்துக்களை அளித்த கலீலியோ கலிலி பிறந்த தினம் வரலாற்றில் இன்று.