இவர் கோள்களின் இயக்கம் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு புதிய முக்கியமான மூன்று கோள்களின் இயக்கவிதிகளை உருவாக்கினார். இந்த விதிகளை, ‘கெப்லரின் இயக்கவிதிகள்’ என்றே அழைக்கப்படுகின்ரது.இவரை பெருமைபடுத்த பிறவிண்மீன் கோள்களை தேடும் அமெரிக்காவின் நாசாவின் விண்கலத்திற்கும் கெப்லர் திட்டம் என்றே பெயரிட்டுள்ளனர். ஜொகான்னஸ் கெப்லர் டிசம்பர் மாதம் 27ம் தேதி, 1571ம் வருடம் பிறந்த ஜேர்மனியரான இவர், விண்ணியலாளர், கணிதவியலாளர் மற்றும் சோதிடர் என பல துறைகளில் திறமை கொண்டவர்.17ம் நூற்றாண்டின் விஞ்ஞானப் புரட்சியில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக கோள்களைப் பற்றியும் அவற்றின் இயக்கமுறைகள் பற்றியும் முதன்முதலில் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை செய்தவர் இவர்தான். இதற்க்கு முன், நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் முதன்முதலில் அறிவித்த சூரிய மையக் கோட்பாட்டை அதாவது சூரியன் + கோள்கள் உள்ளடங்கிய தொகுதியின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், அதனைச் சுற்றியே கோள்கள் வலம்வருவதாகவும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கருதுகோளை வெளியிட்டார். ஆனால் அவரது மாதிரியில் சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் வட்டவடிவில் சுற்றிவந்தன. இது அந்த காலத்தில் இது ஒரு முரண்பட்ட கருத்தாக இருந்தது.
காரணம் அக்காலத்தில் பூமியை மையமாகக் கொண்டே சூரிய சந்திரன் உட்பட ஏனைய கோள்கள் வலம்வருகின்றன என்கிற கோட்பாட்டை ஆட்சி அதிகாரத்தில் இருந்த அல்லது ஆட்சியில் செல்வாக்குச் செலுத்திய கிறித்தவ சபைகள் ஏற்றுக்கொண்டிருந்தன. இதற்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பவர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், எப்படிய்ம் , நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் தொடங்கிவைத்த ‘இவரது புரட்சி’ வெற்றிகரமாக சமையவாதிகளின் பிடியில் இருந்து விஞ்ஞானத்தை மீட்டெடுத்தது எனலாம். கோப்பர்னிக்கஸ் முன்வைத்த சூரியமையக்கோட்பாட்டை கொண்டு கெப்லர் தனது ஆய்வை முன்னெடுத்தார். கோப்பர்னிக்கஸ் கூறிய கருத்தில் இருந்த பின்வரும் கருதுகோள்களை சரியெனக் கூறினார் கெப்லர்.
மேலும், அவர் உருவாகிய கணித மாதிரியில் இருந்து வெளிப்படையான பின்வரும் முடிவுகளுக்கு வந்தார்.
அவையே கோள்களுக்களின் இயக்கத்திற்கான கெப்லரின் இயக்க விதிகள் ஆகும், இவற்றினால் தான் விண்வெளி துறையில் அடுத்த புரட்சி ஏற்படுத்தப்பட்டது.
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…