அத்துமீறியது நீங்களே!10 கிலோமீட்டர் பின்னே செல்லுங்கள்-11 மணி நேர பேச்சுவார்த்தை!!

Default Image

11 மணி நேரமாக நீடித்த சீனா-இந்தியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை குறித்த விரிவான தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பேச்சுவார்த்தையில் சீனா  இந்திய எல்லைக்குள் அதனது கட்டமைப்பைக் குறைக்க வேண்டும் என்றும்;அதன் படைகள் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தியுள்ளது.

லடாக் எல்லைப்பகுதியான கால்வான் பள்ளத்தாக்கை கைப்பற்ற எண்ணம் கொண்டு அத்துமீறி நுழைந்து சொந்தம் கொண்டாடிய சீனாவின் அராஜக போக்கினை இந்திய ராணுவம் தனது இரும்புகர துப்பாக்கி கொண்டு அடக்கியது.இந்த வீரதீர சம்பவத்தில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்நிலையில் எல்லையில் இந்தியா படைகள்,ஆயுதங்களை குவித்தது;அதே போல் சீனாவும் படைகளையும்;ஆயுதங்களையும் குவித்தது.இதனால் அங்கு போர் மேகம் சூழும் அபாயம் ஏற்பட்டது.ஆனால் இந்தியா அமைதியை விரும்புகிறது என்று கூறியதுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது.

இந்நிலையில் ஜுன்.,22ந்தேதி(திங்களன்று) இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உயர்மட்ட இராணுவ பேச்சுவார்த்தை நடந்தது.இந்த பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட 11 மணி நேரம் நீடித்தது, கால்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீனா விலகுவது குறித்து சீனர்விற்கு காலக்கெடுவை இந்தியா கோரியுள்ளதாகவும், குறிப்பாக, பாங்காங் த்சோ மற்றும் சூடான நீரூற்றுகள் போன்ற இடங்களில் இருந்து விலகி செல்ல வேண்டும் என்றும் லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஐ.சி) நடந்துகொண்டிருக்கும் இந்த சந்திப்பில் இந்திய இராணுவத்தின் 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் பல அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டம் நடைபெற்றது .

இப்பேச்சுவார்த்தையில்  சீன இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் கலந்து கொண்டார்.காலை 11:30 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்த இந்த சந்திப்பில் இந்தியா சீனாவின் அத்துமீறல், ஆக்கிரமிப்பு,அதிகார முகாம்கள் ,பதுங்கு குழிகள் உள்ளிட்டவைகளை எல்லாம் வலியுறுத்தியது.

அதன் படி சீன இராணுவத்தால் முன்மொழிந்து கோரப்பட்ட இந்த கூட்டத்தில், கடந்த மே மாதம் சீனா எல்லையில் பற்றவைத்த பதற்றம்,அதன்பின்னர் ஜூன் 6 ம் தேதி அப்பகுதியிலிருந்து வெளியேற ஒப்புக் கொண்ட விஷயங்கள்,ஆனால் சீனா ஜூன் 15 “முன்கூட்டியே எல்லையில் பதுங்கியிருந்து” போன்றவைகள் குறித்து எல்லாம் இந்தியா கேள்வி எழுப்பியதாக  ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுவார்த்தையில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதி, பங்கோங் த்சோவில் நிலைமையை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் கோரியது. இரு படைகளின் உயர்மட்ட தளபதிகளுக்கு இடையில் இரண்டாவது உயர்மட்ட இராணுவ பேச்சுவார்த்தைகள் எல்.ஐ.சி  நடந்து கொண்டிருந்த நிலையில், இரு படைகளுக்கும் இடையிலான முந்தைய சந்திப்பில், ஜூன் 15 ஆம் தேதி சீனர்கள் ஒரு அதிகாரியை இழந்ததாக ஒப்புக்கொண்டதாக செய்திகள் வந்தன.மேலும் 20 வீரர்கள் உயிரிழப்பு,சீன ராணுவம் இந்திய வீரர்களின் மீது கற்களை வீசி தாக்கியது  என பேச்சுவார்த்தையில் கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் வலியுறுத்தப்பட்டதாகவும் இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் 11 மணி நேரமாக நடைபெற்ற இச்சந்திப்பில் இறுதியாக இந்தியா கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி அமைத்துள்ள முகாம்களை எல்லாம்  அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மேலும் சீன படைகள் இந்திய எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியதாகவும் அதனோடு மட்டுமின்றி பாங்காங் த்சோவில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களைக் நிறுத்தியதுடன்  4 பகுதியைச் சுற்றி பதுங்கு குழிகளையும் கட்டமைப்புகளையும் கட்டியுள்ளதாக கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி அதனையும் அகற்ற வேண்டும் என்றும் இந்திய துருப்புக்கள் அங்கு ரோந்து சென்று வருவார்கள் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

seeman tvk vijay
INDvENG 3rd ODI ENG won the toss
rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy