தனது அழகான மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஜி. வி. பிரகாஷ்.!
ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியரின் அழகான மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பாடகராக அறிமிகமான ஜி. வி. பிரகாஷ் தற்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு முன்னணி பாடகியான சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததாக ஜி. வி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் தங்களது குழந்தைக்கு “Anvi” என்று பெயரிடப்பட்டுள்ளனர். தற்போது ஜி. வி. பிரகாஷ் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த அழகான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
Here is my princess #Anvi … @singersaindhavi @BhavaniSre …. photo by #mommyshotsamrita pic.twitter.com/3gWOMqwq1G
— G.V.Prakash Kumar (@gvprakash) August 26, 2020
One more of my #superwoman…. #Anvi … #mommyshotsamrita pic.twitter.com/e5Eq6z3NL2
— G.V.Prakash Kumar (@gvprakash) August 27, 2020