ஜி. வி. யின் ‘ஜெயில்’ படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் இன்று.!

Published by
Ragi

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள ‘காத்தோடு’ என்ற பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ளதாகவும், அதனை கபிலன் எழுதியுள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் வெளிவரும் என்றும் ஜிவி கூறியிருந்தார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் பாடிய பாடலின் புரோமோ வீடியோவை ஜிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O : “அனைத்து பள்ளிகளிலும் முக்கிய அறிவிப்பு” மு.க.ஸ்டாலின் உறுதி!

காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O : “அனைத்து பள்ளிகளிலும் முக்கிய அறிவிப்பு” மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…

21 minutes ago

புதுவித சாதனை படைத்த ஷிவம் துபே… இந்த ரெக்கார்டில் உலகிலே இவர் தான் முதல் கிரிக்கெட் வீரர்.!

சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…

31 minutes ago

விராட் கோலி ‘க்ளீன்’ போல்டு! “பவுலர் ஒரு ரத்தினம்” புகழ்ந்து தள்ளிய அஷ்வின்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…

1 hour ago

திருப்பரங்குன்றம் விவகாரம் : “இந்து மத உணர்வுகளை திமுக அரசு புறக்கணிக்கிறது” ஆவேசமான வானதி!

கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… சவரனுக்கு இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…

3 hours ago

LIVE : நாளை ஈரோடு இடைத்தேர்தல் முதல்… பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு வரை.!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…

3 hours ago