ஜி மெயிலின் அட்டகாசமான அப்டேட்..! வீடியோ உள்ளே..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்டில் நமக்கு வந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மெயிலை டவுன்லோடு செய்யாமல் தனித்தனியாக அனுப்பாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைலை பார்வேர்டு செய்யலாம்.
நாம் ஒரு நபர்க்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றால் முன்பு தபால் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம்.பின்னர் ஏற்பட்ட மாற்றத்தால் போன் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம். ஆனால் காலம் மாற மாற தகவல்களை குறுச்செய்தி , ஜி மெயில் , வாட்ஸ்ஆப் போன்றவை மூலமாக அனுப்பி வருகிறோம்.
இதில் அதிகமாக ஜி மெயில் , வாட்ஸ்ஆப் ஆகிய இரண்டு மூலமாக தான் பெருபாலான தகவல்களை அனுப்பி வருகிறோம். இப்படி அதிகமான பயனாளர்கள் ஜி மெயில் , வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதால் அந்தந்த நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய புதிய அப்டேட்களை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப்பில் கொண்டு வந்தது. அது என்னவென்றால் முன்பு நாம் வாட்ஸ்ஆப்பில் ஒரு நபருக்கு ஆடியோ கால் செய்யும் போது அவர் வேறு ஒருவருடன் பேசி கொண்டு இருந்தால் வெயிட்டிங் காலாக வராது . ஆனால் தற்போது வெயிட்டிங் காலாக வந்துவிடும். இந்த வசதி முதலில் ஆப்பிள் போனுக்கு மட்டும் இருந்தது. தற்போது இது அனைத்து ஆண்டிராய்டு போனுக்கும் வந்துவிட்டது.
இந்நிலையில் ஜி மெயிலில் ஒரு நபருக்கு நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட பல தகவல்களை மெயில் மூலமாக அனுப்ப வேண்டும் என்றால் அந்த தகவலாக தனித்தனியாக அனுப்ப வேண்டும். ஆனால் இந்த குறைக்கு கூகிள் நிறுவனம் ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
நமக்கு வந்து இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைலை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் அந்த மெயிலை டவுன்லோடு செய்து பிறகு தனித்தனியாக தான் பார்வேர்டு செய்ய முடியும்.ஆனால் தற்போது கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்டில் நமக்கு வந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மெயிலை டவுன்லோடு செய்யாமல் தனித்தனியாக அனுப்பாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைலை பார்வேர்டு செய்யலாம்.
அது எப்படி என்றால் நமக்கு வந்து இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைலை மற்றவருக்கு அனுப்பவேண்டும் என்றால் அனுப்பவேண்டிய அனைத்து அதை ஃபைலையும் தேர்வு செய்து கொள்ளவும் பின்னர் மேற்கண்ட படத்தில் உள்ளவாறு அந்த பட்டனை கிளிக் செய்யவும் அப்போது பார்வேர்டு அட்டச்மெண்ட் என இருக்கும் கிளிக் செய்தவுடன் நேரடியாக இன்பாக்ஸ் சென்று விடும்.
Get attached to this #gmail update: You can now attach emails to other emails without downloading them. Learn more → https://t.co/pINcInu7bh pic.twitter.com/nstzFdN0Im
— Gmail (@gmail) December 9, 2019
பின்னர் தேர்வு செய்த ஃபைலை இன்பாக்ஸில் இழுத்து விடவும் இதை தொடர்ந்து நம் அனுப்ப வேண்டிய நபருக்கு ஃபைலை அனுப்பவும்.இந்த புதிய அப்டேட்டை கூகுள் நிறுவனம் இன்னும் சில நாள்களில் அறிமுகப்படுத்த உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025![DMKProtest](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/DMKProtest-.webp)
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
February 18, 2025![Loksabha Opposition leader Rahul gandhi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Loksabha-Opposition-leader-Rahul-gandhi.webp)
குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
February 18, 2025![kuldeep or chakaravarthy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/kuldeep-or-chakaravarthy.webp)
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
February 18, 2025![PinkAuto](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PinkAuto.webp)