போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஜி. வி.! ராஜீவ் மேனன் இயக்கிய “Say No To Drugs”.!

Default Image

போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மதன் கார்க்கி வரிகள் எழுத ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26ஆன இன்று அனுசரிக்கப்படுகிறது. பலர் சமூக வலைத்தளங்களின் மூலம் போதைப்பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி கருத்துகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன், ஜி. வி. பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து தயாரித்துள்ளனர்.

“Say No To Drugs” என்ற அந்த பாடலை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, அவருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுத கவின் ஆதித்யா எடிட்டிங் செய்துள்ளார்.’Say No To Drugs, Say Yes To Life ‘என்ற வரிகளுடன் கூடிய அந்த விழிப்புணர்வு பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்