கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வைரஸ் பாதிப்பை தடுக்க, பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படும் முயற்சியை, நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இதற்காக முதலில், ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் தலைவர்களுடன், மோடி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவருடைய ஆலோசனையின்படி, ஜி – 20 என்ற பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது.இந்த ஜி – 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் உள்பட, 20 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜி – 20 நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர்கள் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பின் இது தொடர்பாக, கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜி – 20 நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தேவை அதிகம் உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவ ஜி – 20 நாடுகள் தற்போது முன்வந்துள்ளனர்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…