2018 தமிழக பட்ஜெட்:ரூ. 1,361.60 கோடி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!
ரூ. 1,361.60 கோடி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்று கூறிய அவர், குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2வது மாநிலம் தமிழகம் என்று ஓபிஎஸ் கூறினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.